
<P>* சக்தி மீது கொண்ட பக்தியினால் பல நன்மைகள் உண்டு. மலையினைப் போன்ற புஜங்களின் மீது சக்தி தன் பொற்பாதங்களை வைத்திருக்கிறாள். அதனால், தினமும் உழைக்கும் சமயத்திலும், பிற பணிகளைச் செய்யும் போது எல்லாம் சக்தி தேவி நம்மோடு இருப்பதாக எண்ண வேண்டும். <BR>* அலைகள் பொங்கி எழும் கடலின் மீது, சக்தி ஒரு தோணியாக வருவாள். அந்த தோணியில் பயணம் செய்து, பிறவிக்கடலைக் கடந்து விடலாம். <BR>* முருகப்பெருமானை நினைப் பவர்களுக்கு நல்லறிவைப் பயன்படுத்தி அறவழியில் சேர்த்த செல்வம் சேரும். அவரது வலிமையால் தீமைகள் விலகிச் செல்லும். அவரை நிøனைப்பவர்களுக்கு எவ்விதக் குறையு மில்லை. மனதில் கவலை கடல் போல தோன்றும் போது, குமரப்பெருமானின் கையிலிருக்கும் வேல் பாதுகாக்கும். <BR>* எங்கள் இறைவனே! உலகில் எத்தனையோ கோடி இன்பங்களை வைத்துள்ளாய். பிறக்கும் உயிர்களுக்கு முக்தி என்னும் ஒரு பேரின்ப நிலையினை வைத்தாய். அந்நிலையில் இப்பிரபஞ்ச ரகசியங்களை அறியும் உணர்வையும் வைத்தாய். அதற்கு பக்தி என்னும் சாதனத்தையும் தந்து எமக்கு நல்வழி காட்டினாய்.</P>